ரிசாத் குடும்பத்தினர் கைது; பல கோணத்தில் விசாரணை - sonakar.com

Post Top Ad

Friday 23 July 2021

ரிசாத் குடும்பத்தினர் கைது; பல கோணத்தில் விசாரணை

 ரிசாத் பதியுதீன் வீட்டில் பணி புரிந்த 16 வயது சிறுமி மரணத்தின் பின்னணியிலான விசாரணைகள் மேலும் விரிவாக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவரது மனைவி, மாமனார் மற்றும் மைத்துனன் உட்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தற்போதைய விசாரணையின் ஒரு கட்டமாக முன்னர் ரிசாத் வீட்டில் பணி புரிந்த ஒருவரின் வாக்குமூலம் அடிப்படையில் 2015 - 2019 காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னணியில் ரிசாத் பதியுதீனின் மைத்துனன் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை, மேலும் பலரிடம் பல கோணங்களில் விசாரணைகள் தொடர்வதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment