எதிர்க்கட்சி இனி தலையெடுக்க முடியாது: பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Friday 23 July 2021

எதிர்க்கட்சி இனி தலையெடுக்க முடியாது: பிரசன்ன

 


ஆளுங்கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் பிளவுகள் இல்லையென்பது கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க.


இந்நிலையில், அரசாங்கத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையை மேற்கொள்ள நினைத்தாலும் எதிர்க்கட்சிக்கு தோல்வி நிச்சயம் என்பதும் உறுதியாகியுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச, மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதை அறிவித்ததிலிருந்து எதிர்க்கட்சி முழுமையாகத் துவண்டு விட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


இப்பின்னணியில் இனியும் எதிர்க்கட்சியினால் தலையெடுக்க முடியாது எனவும் அவர் ஆரூடம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment