அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்ந்தும் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில் முன்னதாக தன்னை கடலில் வீசி கொலை செய்வதற்கு ரதன தேரர் முயன்றதாக தெரிவிக்கிறார் விமலதிஸ்ஸ தேரர்.
கட்சியின் செயலாளராக இருந்த விமலதிஸ்ஸ தேரர், தன்னைத்தானே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து விட்டுத் தலைமறைவாக இருந்தார்.
இக்காலப் பகுதியிலேயே தன்னை ரதன தேரர் கடத்திக் கொலை செய்ய முயன்றதாகவும் மூன்றே மாதங்களில் ஞானசார தேரருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுப்பதாக தெரிவித்தே ரதன தேரர் உள்நுழைந்து கொண்டதாகவும் விமலதிஸ்ஸ மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment