ஜனாதிபதியின் 40 லட்சம் தென்னங்கன்று திட்டம் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Sunday 11 July 2021

ஜனாதிபதியின் 40 லட்சம் தென்னங்கன்று திட்டம் ஆரம்பம்

 


வீட்டுக்கு வீடு தென்னை மரம் (தொரின் தொரட்ட கப்ருக) எனும் பெயரிலான 40 லட்சம் தென்னங்கன்றுகளை நடும் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.


சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான தங்கொட்டுவ - புஜ்ஜம்பொலஇ வெலிகெட்டிய தோட்டத்தில் நேற்றைய தினம் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


வருடாந்த தேங்காய் அறுவடையை 3600 மில்லியனாக அதிகரிக்கும் திட்டத்துக்கமைவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment