மேலும் 2 மில்லியன் சீன தடுப்பூசி வரவு - sonakar.com

Post Top Ad

Sunday 11 July 2021

மேலும் 2 மில்லியன் சீன தடுப்பூசி வரவு

 


ஸ்ரீமேலும் 2 மில்லியன் சீன தடுப்பூசிகள் இன்று நாடு வந்து சேர்ந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இதனை பல மாவட்டங்களிடையே பகிர்ந்தளிப்பதற்கான திட்டம் பற்றியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் கொழும்பு மற்றும் குருநாகலுக்கு தலா 2 லட்சம் தடுப்பூசிகளும் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுர, பதுளை, நுவரெலிய, ரத்னபுர, மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு ஒரு லட்சம் தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதுவரை 6.5 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளமையும் 1.4 மில்லியன் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதுடன் 3.9 மில்லியன் பேர் இரண்டு தடுப்பூசிகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment