இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3500ஐ தாண்டியுள்ளது. இன்றைய தினம் பட்டியலில் 35 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வெண்ணிக்கை 3502 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா முதலாவது அலையின் போது 11 மரணங்களே பதிவாகியிருந்த அதேவேளை மூன்றாவது அலையில் மரண எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தது.
தற்சமயம், 26634 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment