ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் அறிவில்லாதவர்கள்: ஜோன்ஸ்டன் - sonakar.com

Post Top Ad

Sunday 11 July 2021

ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் அறிவில்லாதவர்கள்: ஜோன்ஸ்டன்

 


பெருந்தொற்றுக் காலத்தில் சுகாதார விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அறிவில்லாதவர்கள் என்று விசனம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.


கொரோனா சூழ்நிலையில் கொத்தலாவல பல்கலைக்கழகத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு கட்டாய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், கட்டுப்பாடுகள் மனித உரிமைகளை மீறியதாக அமையக் கூடாது என இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி தெரிவித்துள்ளதுடன் சமகி ஜன பல வேகய அடிப்படை உரிமை வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment