எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு பசில் ராஜபக்ச தரக்கூடிய மாற்றுத் தீர்வைத் தாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
அண்மையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டமை பாரிய பேசு பொருளாக இருக்கின்ற அதேவேளை, கம்மன்பில பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கையை மீளவும் உறுதி செய்துள்ளார் பெரமுன செயலாளர் சாகர காரியவசம்.
இந்நிலையில், எதிர்க்கட்சியினர் தமக்கு எதிராகக் கொண்டு வர முனையும் நம்பிக்கையில்லா பிரேரணை சிறுபிள்ளை விளையாட்டு எனவும் வர்ணித்துள்ள கம்மன்பில, பசில் ராஜபக்ச தரக்கூடிய தீர்வை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment