அத்தியாவசிய சேவைகள்: மேலும் ஒரு விசேட வர்த்தமானி - sonakar.com

Post Top Ad

Friday, 18 June 2021

அத்தியாவசிய சேவைகள்: மேலும் ஒரு விசேட வர்த்தமானி

 கொரோனா சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடர அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவது குறித்து புதிய வர்த்தமானியொன்று ஜனாதிபதி செயலகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


துறைமுகங்கள், பெற்றோலிய தயாரிப்புக்கள், சுங்கம் மற்றும் ரயில்வே திணைக்களம் போக்குவரத்து உட்பட கூட்டுறவு சதோச போன்ற மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் பிற நுகர்வோர் பொருட்களை வழங்கும் தொடர்புடைய நிறுவனங்களும் அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


கொரோனா பரவல் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் தற்சமயம் நாடளாவிய ரீதியிலான பிரயாணக் கட்டுப்பாடு அமுலில் உள்ளமையும் தினசரி ஆயிரக்கணக்கானோர் விதி மீறலின் பின்னணியில் கைது செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment