பாணந்துறை சம்பவம்: இரு பொலிசார் இடை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Monday 7 June 2021

பாணந்துறை சம்பவம்: இரு பொலிசார் இடை நிறுத்தம்நேற்றைய தினம் பாணந்துறையில் பொலிஸ் வாகனத்திலிருந்து குதித்து, காயமுற்ற நிலையில் உயிரிழந்ததாக ஸ்ரீலங்கா பொலிசாரால் தெரிவிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து பிரதேச மக்கள் தரப்பிலிருந்து சந்தேகம் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சார்ஜன்ட் தரத்திலுள்ள இருவர் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.


கொரோனா விதிகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்ற வேளையில் இறந்தவர், வாகனத்தை விட்டு குதித்ததாக பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment