நேற்றைய பட்டியலில் வீடுகளில் 13 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Monday 7 June 2021

நேற்றைய பட்டியலில் வீடுகளில் 13 மரணங்கள்

 



நேற்றைய தினம் 46 கொரோனா மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 13, வீடுகளில் நிகழ்ந்த மரணங்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.


மே மாதம் 17ம் திகதியிலிருந்து நேற்று முன் தினம் வரையில் இடம்பெற்ற மரணங்களில் சிலவே நேற்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 1742 ஆக உயர்ந்துள்ளமையும் வைத்தியசாலைகளில் வசதிக் குறைபாடு காரணமாக ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment