ஊரடங்கை அமுல்படுத்துவதே ஒரே வழி: PHI சங்கம் - sonakar.com

Post Top Ad

Sunday 6 June 2021

ஊரடங்கை அமுல்படுத்துவதே ஒரே வழி: PHI சங்கம்தற்போது அமுலில் இருக்கும் போக்குவரத்து தடையினால் பலன் எதுவமில்லையெனவும் மீளவும் ஊரடங்கை அமுலுக்குக் கொண்டு வருவதே ஒரே வழியெனவும் தெரிவிக்கிறது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்.


நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக இருப்பதுடன் பொது மக்களை கட்டுப்படுத்துவதும் பாரிய சிரமமாக இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மீண்டும் ஊரடங்கை அமுல் படுத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ள அதேவேளை நாட்டை முடக்கி பொருளாதாரத்தை முடக்க முடியாது என அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும், பொருளாதாரத்தை விட மக்கள் நலன் முக்கியம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment