சில ம.கிழக்கு - ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கை வர தடை - sonakar.com

Post Top Ad

Tuesday 29 June 2021

சில ம.கிழக்கு - ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கை வர தடைசில மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு 14 நாட்களுக்குள் பயணித்திருப்போர் இலங்கை வருவதற்குத் தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் சவுதி, குவைத், கட்டார், பஹ்ரைன், அமீரகம், ஒமான் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் நமீபியா, மொசம்பிக், அங்கோலா, பொட்சுவானா, சிம்பாப்வே, சுவாசிலாந்து போன்ற ஆபிரிக்க நாடுகளில் 14 நாட்களுக்குள் பிரயாணித்திருப்பவர்கள் ஜுலை 1ம் திகதி முதல் 13ம் திகதி வரை இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. எனினும், இந்நாடுகள் ஊடாக (transit) பயணித்தவர்களுக்கு விதிவிலக்கு  உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment