2 மாதங்களுக்குள் நாடு வழமைக்குத் திரும்பும்: அமைச்சர் - sonakar.com

Post Top Ad

Tuesday 29 June 2021

2 மாதங்களுக்குள் நாடு வழமைக்குத் திரும்பும்: அமைச்சர்

 


இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நாடு வழமைக்குத் திரும்பி, மக்கள் இயல்பு வாழ்க்கை வாழலாம் என தெரிவிக்கிறார் அமைச்சர் காமினி லொகுகே.


நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவமளித்தே அரசாங்கம் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் அதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கும் அவர், அரசின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் போலியான பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.


கொரோனா மூன்றாவது அலை தற்போது குறிப்பிட்ட அளவு 'கட்டுப்பாட்டுக்குள்' வந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment