பசிலுக்காக பதவி துறக்க ரஞ்சித் பண்டார தவிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 26 June 2021

பசிலுக்காக பதவி துறக்க ரஞ்சித் பண்டார தவிப்பு

 


பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகி, அதனைத் தொடர்ந்து அமைச்சுப் பதவியொன்றையும் பெற்றுக் கொள்வது ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில் அவருக்காக தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்க பெரமுன தேசியப் பட்டியல் உறுப்பினர்களிடையே ஆர்வம் நிலவுகிறது.


இந்நிலையில், பெரும்பாலும் ரஞ்சித் பண்டாரவுக்கே அந்த தியாகத்தைச் செய்யும் பாக்கியம் கிடைக்கும் எனவும் அதற்குப் பகரமாக அவருக்கு மத்திய வங்கியில் உயர் பதவியொன்று கிடைக்கும் எனவும் பெரமுன தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.


அமெரிக்கா சென்று திரும்பிய பசில் தற்போது சுகாதார விதிகளின் படி தனிமைப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஜுலை 6ம் திகதியளவில் அவரது பதவியேற்பு எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment