சமகி ஜன பல வேகய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கராபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ரஞ்சனுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள அதேவேளை அவருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
எனினும், மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு பரவலாக எதிர்பார்க்கப்பட்ட பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment