உலக அளவிலான கொரோனா மரணங்கள் 4 மில்லியனை எட்டியுள்ளது. முதல் இரண்டு மில்லியன் மரணங்கள் ஒரு வருட காலத்தில் இடம்பெற்றிருந்த அதேவேளை இரண்டாவது பாதி ஆறு மாதங்களுக்குள் இடம்பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து நிலைகளில் இருக்கின்ற அதேவேளை, தொடர்ச்சியாக புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் முதலாவது அலையின் போது 12 மரணங்களே பதிவாகியிருந்த அதேவேளை தற்சமயம் மொத்த மரண எண்ணிக்கை 2400ஐத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment