விமலுக்கு செய்ததை சமலுக்கு செய்வீர்களா: வாசு சீற்றம்! - sonakar.com

Post Top Ad

Monday 21 June 2021

விமலுக்கு செய்ததை சமலுக்கு செய்வீர்களா: வாசு சீற்றம்!

 


விமல் வீரவன்சவின் பொறுப்பின் இலாபமீட்டிக் கொண்டிருந்த லங்கா பொஸ்பட் நிறுவனத்தை மஹிந்தானந்த அளுத்கமகேவின் விவசாயத்துறை அமைச்சின் கீழ் கொண்டு சென்றமை கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளுக்கு செய்யப்பட்ட துரோகம் என்கிறார் வாசுதேவ நானாயக்கார.


அப்படிப் பார்த்தால், நீர் விநியோகமும் விவசாய அமைச்சின் கீழ் தான் இருக்க வேண்டும் எனும் நியாயத்தின் அடிப்படையில் தற்போது சமலின் பொறுப்பின் கீழுள்ள அத்திணைக்களத்தையும் அரச மேல் மட்டம் மஹிந்தானந்தவிடம் ஒப்படைக்குமா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


கம்மன்பில மற்றும் விமல் வீரவன்சவுக்கு பெரமுன தரப்பில் நெருக்கடிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் வாசு மற்றும் ஏனைய பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment