வீட்டுப் பாவனைக்கான எரிவாயு விலையை உயர்த்துவது தொடர்பில் கடந்த சில நாட்கள் அவதானம் செலுத்தப்பட்டு வந்திருந்தது. எனினும், விலையுயர்வு எதுவும் இடம்பெறாது என தெரிவிக்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர.
எரிவாயு நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் எரிபொருள் விலைகளை உயர்த்தியதன் பின்னணியில் அரசுக்குள் சர்ச்சை வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment