மேல் மாகாணத்தில் 700 வீதித் தடைகள் - sonakar.com

Post Top Ad

Monday 21 June 2021

மேல் மாகாணத்தில் 700 வீதித் தடைகள்

 


மேல் மாகாணத்தில் இன்று 700 வீதித் தடைகள் உருவாக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


இதில் 37 வீதித் தடைகள் 'நிரந்தரமாக' இயங்கும்  எனவும் ஏனையவை தற்காலிகமானவை எனவும் விளக்கமளித்துள்ள பொலிஸ் பேச்சாளர், சுமார் 10,000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஜுலை 5ம் திகதி வரை பின்பற்றுவதற்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment