நாளை தடை நீக்கம்: SLMA அதிருப்தி - sonakar.com

Post Top Ad

Sunday 20 June 2021

நாளை தடை நீக்கம்: SLMA அதிருப்தி

 


நாளைய தினம் நாடளாவிய பிரயாணத் தடை நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீள் பரிசீலனை செய்து மேலும் சில நாட்களுக்குத் தடையை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது இலங்கை மருத்துவ சங்கம்.


தினசரி 2000க்கு மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் பதிவாகி வரும் நிலையில் தடை நீக்கம் ஆபத்தானது என சுட்டிக்காட்டியுள்ள குறித்த அமைப்பு, தடை நீக்கமானது சுகாதரத்துறையினது சுமையை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கிறது.


இந்நிலையில், அரசியல் ரீதியிலான முடிவுகளுக்கு அப்பால் இவ்விடயத்தில் சுகாதாரத்துறையின் நிபுணத்துவத்தை கருத்திற் கொள்ள வேண்டும் எனவம் தடை நீக்கத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment