அசாத் சாலியின் வழக்கு: 14ம் திகதி விசாரணை - sonakar.com

Post Top Ad

Wednesday 2 June 2021

அசாத் சாலியின் வழக்கு: 14ம் திகதி விசாரணை

 


முன்னாள் ஆளுனர் அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை வழக்கின் மீதான விசாரணைக்கு தேதி குறித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


இப்பின்னணியில் எதிர்வரும் 14ம் திகதி இவ்வழக்கு விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தவணைகள் அடிப்படை உரிமை மனுவை நீதிமன்றம் பரிசீலித்திருந்த அதேவேளை, அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகளை ஜுன் 2ம் திகதிக்குள் முடிக்குமாறு கடந்த தவணையில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


தடுப்புக்காவலில் இருந்த அசாத் சாலி, சுகயீனமுற்றதன் பின்னணியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment