அக்குறணை முஸ்லிம் பாலிகா: 27 பேர் பல்கலை தகுதி - sonakar.com

Post Top Ad

Thursday 6 May 2021

அக்குறணை முஸ்லிம் பாலிகா: 27 பேர் பல்கலை தகுதி

 அக்குறணை முஸ்லிம் பாலிகா மஹா வித்தியாலத்தில் 2020 உயர் தரப்பரீட்சையில் தோற்றிய மாணவிகளில் இம்முறை 27 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதிற்கு தகுதி பெற்றுள்ளதாக என்று பாடசாலை அதிபர்  சுஹீரா சித்தீக் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் ஆங்கில மொழியில் தோற்றிய சுக்ரா அன்சார் 03 ஏ சித்திகளையும் நதா ரழீன் 02 ஏ ஒரு பி. சித்தியினையும் பெற்று மருத்துவத் துறைக்கு தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் மேலும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் ஐந்து மாணவிகள் பல்லைக்கழகம் செல்வதற்கான தகுதி பெற்றுள்ளளனர்.


வர்த்தகப் பிரிவில் சவ்வா பயாஸ் தமிழ் மொழி மூலத்தில் 03 ஏ சித்திகளையும்  சீனா மாஹிர் 2 ஏ ஒரு பி னையும் மற்றும்  நசா நளிர் 02 ஏ ஒரு பி பெற்றுள்ளதோடு மேலும் 06 பேர் அளவில் பல்லைக்கழக அனுமதி தகையினைப் பெற்றுள்ளனர்.


கலைத் துறையில் பாத்திமா மர்ஜான் 03 ஏ சித்திகளையும் ரிஹானா ரம்சான் 02 ஏ ஒரு பி சித்தினையும் அதேவேளை ஆங்கில மொழித் துறையில் 02 பி ஒரு சியினைப் பெற்றுள்ளனர். அத்துடன் கலைத்துறையில் பல்கலைக்கழக அனுமதிற்கான தகுதியினைப்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று அதிபர் மேலும் தெரிவித்தார். 


- இக்பால் அலி


No comments:

Post a Comment