தெஹிவளை, பெல்லந்தர சந்தியருகே போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் மது போதையில் இருந்த நிலையில் பொலிசாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது காயமுற்ற பொலிஸ் அதிகாரிகள் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment