அசாத் சாலி அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் - sonakar.com

Post Top Ad

Monday, 5 April 2021

அசாத் சாலி அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

 


முன்னாள் மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி, காரணம் எதுவுமின்றி தாம் தடுத்து வைத்திருக்கப்பட்டிருப்பதற்கு எதிராக அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்துள்ளார்.


கடந்த மாதம் கைது செய்யப்பட்ட அசாத் சாலிக்க எதிராக உறுதியான குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவ்வப் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட்டு வருகிறது.


ஏலவே, ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணையிலும் பதிலளித்த விடயங்கள் தொடர்பிலும் மீளவும் வினவப்பட்டுள்ளதாக அறியமுடிகின்ற அதேவேளை, இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பது அடிப்படை உரிமை மீறல் என அவரது சட்டத்தரணிகள் ஊடாக இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment