ரஞ்சனுக்கு ஜனாதிபதி 'மன்னிப்பு': சஜித் வேண்டுகோள் - sonakar.com

Post Top Ad

Wednesday 21 April 2021

ரஞ்சனுக்கு ஜனாதிபதி 'மன்னிப்பு': சஜித் வேண்டுகோள்

 


நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைவாசம் அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.


எழுத்து மூலமாக இதனை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி தெரிவித்ததன் பின்னணியில் அதனை எழுத்து மூலமாகவும் வழங்கியுள்ளதாக சஜித் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.


நீதிமன்றினால் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை மன்னித்து விடுவிப்பதற்று ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment