தாக்குதலுக்கு ஒரு மணி நேரம் முன்பாகவும் 'வட்சப்' தகவல் - sonakar.com

Post Top Ad

Wednesday 21 April 2021

தாக்குதலுக்கு ஒரு மணி நேரம் முன்பாகவும் 'வட்சப்' தகவல்

 


ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பாகவும் அரச புலனாய்வுத்துறை பணிப்பாளருக்கு வட்சப்பில் இது குறித்து தகவல் கிடைத்துள்ளமை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.


இறுதியாக காலை 8.27 அளவில் 10 மணிக்கு முன்பதாக ஒரு இலக்கில் தாக்குதல் சம்பவம் இடம்பெறப் போவதாகவும் கொழும்பு மெதடிஸ்த தேவாலயம் இலக்குகளுள் ஒன்றெனவும் உளவுத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.


அதற்கு முன்பாக, ஏப்ரல் 20ம் திகதி, சஹ்ரான் குழுவினர் 8 இடங்களைத் தேர்வு செய்து தற்கொலைத் தாக்குதல் நடாத்தப் போவதாக, மிகத் தெளிவான உளவுத் தகவல் கிடைத்துள்ள போதிலும், அரசாங்கம் தாக்குதலைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment