ரஞ்சனின் MP பதவி: 24 வரை நடவடிக்கை எடுக்கத் தடை - sonakar.com

Post Top Ad

Thursday 18 March 2021

ரஞ்சனின் MP பதவி: 24 வரை நடவடிக்கை எடுக்கத் தடை

 


4 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அபகரிப்பதற்கு எதிர்வரும் 24ம் திகதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது.


ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதற்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தலையீடு ஊடாக தற்காலிகமாக அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


வழக்கு விசாரணை தொடர்கின்ற நிலையில் மார்ச் 24 வரை தொடர்ந்தும் ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment