அநுர குமார விரைவில் விசாரிக்கப்படுவார்: சரத் வீரசேகர - sonakar.com

Post Top Ad

Thursday, 18 March 2021

அநுர குமார விரைவில் விசாரிக்கப்படுவார்: சரத் வீரசேகர

 


ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்கவை ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர.


தற்கொலைதாரிகள் இருவரின் தந்தையான இப்ராஹிம் என்பவர் ஜே.வி.பி உறுப்பினர் என்பதோடு அவருக்கு தேசியப் பட்டியல் முன்மொழிவிலும் அவரது பெயர் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் இதன் பின்னணியில் அக்கட்சி தலைவர் விசாரிக்கப்படுவார் எனவும் சரத் வீரசேகர தெரிவிக்கிறார்.


இப்ராஹிம் மற்றும் அவரது புதல்வர்கள், தாக்குதல் திட்டத்துக்காக சஹ்ரானுக்கு 30 மில்லியன் ரூபா பணம் கொடுத்துள்ளதாகவும் சரத் வீரசேகர மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment