7 மாத குழந்தையொன்றை அடித்துத் துன்புறுத்திய காணொளி நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்த நிலையில், இதன் பின்னணியில் யாழ் - அரியாலை பகுதியில் வசித்து வந்த தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்திய நபர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள குறித்த பெண், தனது கணவன் பணம் அனுப்பாமல் விட்ட கோபத்தில் தான் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் குழந்தையை அடிப்பதைக் காணொளியாகப் பதிவு செய்து தந்தைக்கு அனுப்பியதாகவும் விளக்கமளித்துள்ளார்.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையின் நடவடிக்கையினால் பொலிசார் இக்கைதினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment