கைவிடப்பட்ட பெண்ணின் சடலம்; பொலிசார் மேலதிக தகவல் - sonakar.com

Post Top Ad

Tuesday 2 March 2021

கைவிடப்பட்ட பெண்ணின் சடலம்; பொலிசார் மேலதிக தகவல்

 


நேற்றைய தினம், மத்திய கொழும்பு , டாம் வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்த பெண்ணொருவரின் தலையில்லா உடலம் ஹன்வெல்ல பகுதியிலிருந்து பேருந்தில் கொண்டு வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


143ம் இலக்க பேருந்தில் பயணித்த ஒரு நபரே இவ்வாறு உடலப் பொதியைக் கொண்டு வந்து டாம் வீதியில் விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, சந்தேக நபர் ஹன்வெல்லயிலிருந்தே பயணித்துள்ளதாக விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன விளக்கமளித்துள்ளார்.


சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும், தகவல் அறிந்த பொது மக்கள் 0718591557 அல்லது 0112433333 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளும் படியும் வேண்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment