இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்கள் கட்டாயமாக எரிக்கப்படும் வழக்கம் கைவிடப்பட்டுள்ள போதிலும் அடக்கம் செய்வதற்கான நிபந்தனைகள் அறிவிக்கும் வரை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இறந்த உடலங்களை சுகாதார வழிகாட்டலுக்கமைவாக முழுமையாக தொற்று நீக்குவதற்கான அறிவுறுத்தல்களை தயார் செய்து வரும் அதேவேளை, நீர் மட்டம் குறைந்த தீவுப் பகுதிகளை அடக்கம் செய்வதற்கு தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் எந்த நாட்டிலும் இல்லாதவாறு இலங்கையில் மாத்திரமே கட்டாய எரிப்பு இடம்பெற்று வந்த அதேவேளை, தற்போது அரசாங்கம் முன்னர் சொல்லி வந்த விஞ்ஞானத்தை நிரூபிக்க உலர்ந்த தீவுப் பகுதிகளைத் தேடி வருவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment