ரிஸ்கா மரணம்: பேய் விரட்டிய பெண்ணும் தாயும் கைது - sonakar.com

Post Top Ad

Monday 1 March 2021

ரிஸ்கா மரணம்: பேய் விரட்டிய பெண்ணும் தாயும் கைது

 


தெல்கொட - கந்துபொட பகுதியில் பேய் விரட்டுவதாகக் கூறி ஒன்பது வயதான பாத்திமா ரிஸ்காவை பிரம்பால் அடித்துக் கொன்ற பேய் விரட்டும் பெண்ணையும் குழந்தையின் தாயையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.


குழந்தைக்குப் பேய் பிடித்துள்ளதாகக் கூறி அதற்கு பரிகாரம் செய்ய தாயார் அழைத்துச் சென்றுள்ள அதேவேளை, அங்கு பேய் விரட்டும் பெண் குழந்தையை பிரம்பால் அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.


இதன் போது, அடிக்க வேண்டாம் என கதறிய நிலையில் குழந்தை மயங்கி வீழ்ந்து, பின் உயிர் நீங்கியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தாயும் பேய் விரட்டிய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment