ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இன்னும் நியமிக்கப்படாத நலையில் அது குறித்து தனக்கு எதுவும் அவசரமில்லையெனவும் இளைய தலைவர்களை தீர்மானிக்குமாறு தான் விட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
ஓகஸ்ட் மாதம் தேர்தல் முடிவுகள் வெளியாகியும் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. எனினும், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே அதற்குப் பொருத்தமானவர் என கட்சி உறுப்பினர்களுள் ஒரு தொகுதியினர் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், அது குறித்து இளையவர்களே தீர்மானிக்க வேண்டும் என விட்டிருப்பதாக ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment