இனி 'இன - மத' அடையாளத்துடன் கட்சிகளை பதிய முடியாது! - sonakar.com

Post Top Ad

Thursday 25 March 2021

இனி 'இன - மத' அடையாளத்துடன் கட்சிகளை பதிய முடியாது!

 


இனி வரும் காலங்களில் இன - மத அடையாளங்களுடன் பெயர் சூட்டப்பட்ட கட்சிகளை அங்கீகரிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறது தேர்தல் ஆணைக்குழு.


ஏலவே அவ்வாறு பதியப் பட்டுள்ள கட்சிகளுக்கு 'பெயர் மாற்றத்துக்கான' கால அவகாசத்தை வழங்கவும் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இனி வரும் காலங்களில் தேசிய கட்சிகளாகவே பதிவுகளை அங்கீகரிக்கவுள்ளதாகவும் இவ்வாறான இனக்குழுக்கள் அல்லது மதப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான கட்சிப் பெயர்களை அனுமதிக்கப் போவதில்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment