அடுத்து ராஜித - சத்துரவிடம் விசாரணை - sonakar.com

Post Top Ad

Thursday, 18 March 2021

அடுத்து ராஜித - சத்துரவிடம் விசாரணை

 


இணைய ஊடகம் ஒன்றை நடாத்தி வரும் நபர் ஒருவர் தான் கடத்தித் துன்புறுத்தப்பட்டதாக பதிவு செய்திருந்த முறைப்பாட்டின் பின்னணி விசாரிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது புதல்வர் சத்துரவிடம் விசாரிக்கப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளார் பொலிஸ் பேச்சாளர்.


குறித்த கடத்தல் முறைப்பாடு போலியானது என முறைப்பாட்டாளரே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் குறித்த நபர் சத்துரவின் அலுவலகத்தில் சுமார் மூன்று மணி நேரம் இருந்துள்ளதாகவும் இதன் போது ராஜிதவும் அங்கு சென்று வந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.


இந்நிலையில், குறித்த இருவரையும் விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment