ஓட்டமாவடியில் தொடர்ந்தும் ஜனாஸா நல்லடக்கம் - sonakar.com

Post Top Ad

Monday 8 March 2021

ஓட்டமாவடியில் தொடர்ந்தும் ஜனாஸா நல்லடக்கம்

 கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்யும் நிகழ்வு இன்று திங்கள் கிழமை நான்காவது நாளாகவும் இடம் பெற்றது இன்று மதியம் 05 மணிவரை ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தெரிவித்தார்.


இதில் ஆறு ஆண்களும் ஒரு பெண்னுமாக ஏழு ஜனாஸாக்கள் இன்று திங்கள் கிழமை அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் பெகலியாகொடை, மட்டக்குளி, மல்வானை, ஹ_னுபிட்டி களனி, குருணாகல் ஆகிய பிரதேசங்களில் இருந்து தலா ஒருவரது ஜனாஸாவும் திஹாரி பிரதேசத்தை சேர்ந்த இரண்டு ஜனாஸாக்களும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொரோனா தொற்றால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இதற்கமைய நான்கு தினங்களில் முப்பத்தொரு (31) ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் வீ.தவராஜா மேலும் தெரிவித்தார்.


-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment