ரணில் - மைத்ரிக்கு எதிரான வழக்கு ஜுன் வரை தள்ளி வைப்பு - sonakar.com

Post Top Ad

Monday 8 March 2021

ரணில் - மைத்ரிக்கு எதிரான வழக்கு ஜுன் வரை தள்ளி வைப்பு

 


ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக கடந்த அரசின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணையை ஜுன் மாதம் 8ம் திகதி வரை தள்ளி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.


இன்றிலிருந்து மூன்று தினங்களுக்கு தொடர்ச்சியாக மனுவை விசாரிப்பதாக நியமிக்கப்பட்டிருந்த போதிலும் சட்டமா அதிபர் அலுவலகம் வழக்கில் ஆஜராவது குறித்து மீளாய்வு செய்ய வேண்டியிருப்பதாக தெரிவித்ததன் பின்னணியில் இவ்வாறு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையூடாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு எவ்வித தொடர்புமில்லையென தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த அரசே முழுப் பொறுப்பு என ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச தெரிவிக்கின்றமையும் மைத்ரிபால சிறிசேனவை முடக்குவதற்கு சதி செய்யப்படுவதாக சுதந்திரக் கட்சியும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment