மஞ்சள் இல்லாமல் யாரும் சாகவில்லை: பந்துல சீற்றம் - sonakar.com

Post Top Ad

Monday 8 March 2021

மஞ்சள் இல்லாமல் யாரும் சாகவில்லை: பந்துல சீற்றம்


 நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாகவும் அரசைக் குறை கூற வேண்டாம் எனவும் தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.


இது குறித்து வினவப்பட்டபோது தனது சீற்றத்தை வெளியிட்ட பந்துல, முன்னைய ஆட்சியை விட பொருட்களின் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறார். அத்துடன் மஞ்சள் தட்டுப்பாடு என யாரும் இந்த நாட்டில் உயிரிழக்கவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மக்களின் பிரச்சினையெனும் பேரில் அரசைக் குறை கூற வேண்டாம் என தெரிவிக்கின்ற பந்துல நடைமுறை அரசு மக்களுக்குத் தேவையான அனைத்து சலுகைகளையும் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment