இரணைதீவிலேயே ஜனாஸா அடக்க அனுமதி! - sonakar.com

Post Top Ad

Tuesday 2 March 2021

இரணைதீவிலேயே ஜனாஸா அடக்க அனுமதி!

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி  உயிரிழப்போரின் உடலங்களை கட்டாயமாக எரிக்கும் வழக்கத்தைக் கைவிட்டுள்ள இலங்கை அரசு, ஜனாஸாக்களை இரணை தீவில் அடக்குவதற்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கிறது.


வடமாகாணம், மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள இரணைதீவிலேயே அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இறுக்கமான சுகாதார நடவடிக்கைகளுக்கமைவாக அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அரசு சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இதேவேளை, இதற்கான முழு செலவையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது(சோனகர்.கொம்).

No comments:

Post a Comment