5 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது - sonakar.com

Post Top Ad

Tuesday 2 March 2021

5 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

 


ஜனவரி 29 முதல் மார்ச் 1ம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் 509,275 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சுகாதார அமைச்சு.


நேற்றைய தினம் மாத்திரம் 42,925 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள அதேவேளை நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.


வெக்சீன் மைத்ரி என பெயரிடப்பட்ட தடுப்பூசியூடான நட்புறவு திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து 5 லட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு இலவசமாக கிடைக்கப்பெற்றிருந்ததுடன் இலங்கை கொள்வனவு செய்த மேலும் 5 லட்சம் தடுப்பூசிகள் பெப்ரவரி 25ம் திகதியளவில் இலங்கைக்குக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment