ஜனாஸா; இப்போது தானா அரசுக்கு 'தெளிவு' பிறந்தது? JVP - sonakar.com

Post Top Ad

Thursday, 11 February 2021

ஜனாஸா; இப்போது தானா அரசுக்கு 'தெளிவு' பிறந்தது? JVP

 


இலங்கை முஸ்லிம்கள், நிபுணர்கள், சிவில் சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஒரு வருட காலமாக கெஞ்சி வந்த போதும் செவிமடுக்காக கோட்டா அரசு, மனித உரிமைகள் பேரவை மாநாடு இடம்பெறுவதற்கு 3 வாரங்களுக்கு முன்னர் கொரோனா உடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப் போவதாக தெரிவித்திருப்பதானது இவ்வரசாங்கம் எத்தனை கேவலமானது என்பதை உணர்த்துவதாக தெரிவிக்கிறார் ஜே.வி.பி யின் பிமல் ரத்நாயக்க.


இதுவரை சுற்று நிரூபம் வெளியிடப்படவில்லையாயினும், பாக். பிரதமரின் வருகை மற்றும் மனித உரிமைகள் பேரவை மாநாட்டினைக் கருத்திற் கொண்டு, நேற்றைய தினம் பிரதமர் நாடாளுமன்றில் 'அடக்கம்' செய்ய அனுமதிக்கப்படும் என்று மாத்திரம் சுருக்கமாக தெரிவித்த கருத்து உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.


இப்பின்னணியில், ஐக்கிய இராச்சியம் - அமெரிக்கா உட்பட வெளிநாடுகளின் தூதர்களும் பாக. பிரதமர் இம்ரான் கானும் இக்கருத்தினை வரவேற்றுள்ளமை இவ்விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மேலும் அழுத்தத்தை உஉருவாக்கியுள்ளது.

No comments:

Post a Comment