பிரதமர் நேற்றைய தினம் நாடளுமன்றில் மரிக்காருக்கு பதிலளிப்பதாகக் கூறி தெரிவித்த கருத்தைப் பிடித்துக் கொண்டு 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து விட்டு பதுங்கியிருந்தவர்கள் புற்றீசல்கள் போன்று உரிமை கொண்டாடக் கிளம்பி வருவதாக தெரிவிக்கிறார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் ஆளுனருமான அசாத் சாலி.
கட்டாய ஜனாஸா எரிப்புக்கு எதிராக முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் தமது சுய இலாபங்களுக்காக 20ம் திருத்தச் சட்டத்தை ஆதரித்தவர்கள், இந்த விடயத்தில் அரசுக்கு எதுவித நிபந்தனையையோ அல்லது அழுத்தத்தையோ வாக்களிக்க முன் வழங்கவில்லை.
இந்நிலையில், சர்வதேசத்தை திருப்திப் படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள கண்துடைப்பு நாடகத்துக்கு உரிமை கொண்டாட பதுங்கிக் கிடந்தவர்கள் வெளிக்கிளம்புவதாக அவர் விசனம் வெளியிட்டுள்ளார். அரசாங்கம் உத்தியோகபூர்வ ரீதியில் இதனை அறிவித்து நடைமுறையை மாற்றும் வரை இவ்விடயத்தில் தமக்கு நம்பிக்கையில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், முடிவை மாற்றுவதற்கு இன்னும் அவகாசம் தேவையெனும் தொனியில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களும் கவனிக்க வேண்டியவை என சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment