ரணிலை 'பாதிக்காத' வகையில் அறிக்கை: சு.க விசனம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 February 2021

ரணிலை 'பாதிக்காத' வகையில் அறிக்கை: சு.க விசனம்!

 


ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடாத்தி வந்த ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் அறிக்கையைத் தமது கட்சி நிராகரிப்பதாகவும் அது ரணில் விக்கிரமசிங்கவைப் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.


முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தவறு கண்ட அளவுக்கு ரணில் பற்றி குறித்த குழு ஆராயாது விட்டுள்ளதாக விளக்கமளிக்கப்படுகிறது.


இதேவேளை, மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் உச்ச நீதிமன்றமே தீர்மானிக்கும் என நீதியமைச்சர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment