ஈஸ்டர் விசாரணை அறிக்கையில் 'திரிபு' : சிங்ஹல ராவய - sonakar.com

Post Top Ad

Saturday, 27 February 2021

ஈஸ்டர் விசாரணை அறிக்கையில் 'திரிபு' : சிங்ஹல ராவய

 


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீண்ட காலமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை திரிபு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது சிங்ஹல ராவய அமைப்பு.


குறித்த அறிக்கையில், இனப் பிளவுகளைத் தூண்டுவதில் பொது பல சேனாவின் தலைவர் ஞானசாரவின் பங்கு குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஞானசாரவின் 80 வீதமான கருத்துக்களை விசாரணைக்குழு கவனத்திற் கொள்ளாது விட்டுள்ளதாகவும் அவர் 'தேசிய' அக்கறையுடன் தெரிவித்த கருத்துக்கள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவிக்கிறார்.


இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நசுக்குவதை விட்டு தேசிய அமைப்புகளை நெருக்கடிக்குள் தள்ளும் நடவடிக்கையை குறித்து அரசு கரிசணை கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment