கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் உடலங்களை எங்கு அடக்கம் செய்ய அனுமதிப்பது என்ற விபரத்தை இன்னும் 3 அல்லது நான்கு தினங்களுக்குள் அறிவிக்கப்போவதாக தெரிவிக்கிறார் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன.
அடக்கம் செய்வதற்கான விதி முறைகளும் வெளியிடப்படவுள்ளதாகவும் அதற்கமைவாகவே அடக்கம் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கின்றார்.
கட்டாய ஜனாஸா எரிப்பினை கை விடுவதற்கு இணங்கி அரசாங்கம் சுற்று நிருபம் ஊடாக அறிவித்துள்ள போதிலும் அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்ட பின்னரே ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment