மக்கள் நம்பிக்கையிழந்து வருகிறார்கள்: ஆனந்த தேரர் - sonakar.com

Post Top Ad

Sunday 28 February 2021

மக்கள் நம்பிக்கையிழந்து வருகிறார்கள்: ஆனந்த தேரர்

 


மிகக்குறைந்த பதவிக் காலத்துக்குள் மக்களின் நம்பிக்கையை இழந்த அரசாங்கமாக நடைமுறை அரசு மாறி விட்டதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்சவின் மீளெழுச்சிக்குக் தளமமைத்துக் கொடுத்த அபயராம விகாராதிபதி முருத்தொட்டுவே ஆனந்த தேரர்.


பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்த நிகழ்வில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு செல்வதை அனுமதிக்க இயலாது எனவும் அதற்கான ஆவன செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் மஹிந்த மீது வைத்துள்ள நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பி, அதனூடாக தேசியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment