நேற்றைய தினம் இலங்கையில் 460 புதிய கொரோனா தொற்றுக்குள்ளானோர் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது..
சுமார் ஒரு வருடத்தை அண்மித்துள்ள காலப்பகுதியில் இதுவரை மொத்தமாக 82890 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை, அதில் 78373 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
4053 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 464 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்சமயம் கட்டாய ஜனாஸா எரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் ஜனாஸா அடக்கத்துக்கான வழிகாட்டல் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றமையும் அதுவரை ஜனாஸாக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார பணிப்பாளர் விளக்கமளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment