ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவு பெருகியது - sonakar.com

Post Top Ad

Friday 26 February 2021

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவு பெருகியது

 


 


நேற்றயை தினம் கட்டாய ஜனாஸா எரிப்புக் கொள்கையை இலங்கை கைவிட்டதையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் ஆதரவு பெருகியுள்ளது.


கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கருத்து வெளியிட்டு வந்த நிலையில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் விவகாரம் சூடு பிடித்திருந்தது.


எனினும், நிலைமையை சமாளிக்க நேற்றைய தினம் அவசர அவசரமாக கட்டாய ஜனாஸா எரிப்பு கொள்கையை இலங்கை கைவிட்டுள்ள நிலையில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், எகிப்து, மாலைதீவு, சிரியா மற்றும் அசர்பைஜான் உட்பட 21 நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதுடன் 15 நாடுகளே தற்போது எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment