அடக்கம் செய்யலாம்: சுற்று நிருபம் வெளியீடு! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 February 2021

அடக்கம் செய்யலாம்: சுற்று நிருபம் வெளியீடு!

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் உடலங்களை எரிப்பது மாத்திரம் எனும் அரசின் நிலைப்பாட்டை மாற்றி, அடக்கம் செய்வதற்குமான அனுமதி சுற்று நிருபமாக வெளியிடப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்கள் இனியும் கட்டாய தகனத்துக்குள்ளாக்கப்பட மாட்டாது என நம்பப்படுகிறது.


கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் திடீரென ஏற்படுத்தப்பட்ட திருத்தத்தின் பின்னணியில் 350க்கும் அதிகமான முஸ்லிம்களின் உடலங்கள் வலுக்கட்டாயமாக எரியூட்டப்பட்டிருந்தமையும் அதில் 20 நாள் குழந்தையொன்றும் உள்ளடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment